விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.
காலை முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலையில் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 113766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68842 வாக்குகள் பெற்றார்.