யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 8 நாட்களில் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பேசிய முதல்வர் பழனிசாமி, 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்காணலில் அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்ப மனு அளித்தவர்களை குழுக்களாக பிரித்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் நேர்காணலை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…