ஒரே நேரத்தில் ரூ.12,000 கோடி பயிர்க்கடன் ரத்து செய்தது அதிமுக – முதலமைச்சர் பழனிசாமி
அதிமுக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் , கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி கடனை செய்த ஒரே அரசு அதிமுக அரசு.ஸ்டாலினுக்கு இது பொறுக்கவில்லை. ஆட்சியில் இல்லை ,அதிமுக தான் ஆட்சியில் உள்ளது.நான் தான் முதலமைச்சராக உள்ளேன்.இவர் எப்படி விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய முடியும்.எவ்வளவு பித்தலாட்டம் ?..எவ்வளவு பொய் பேசி.கவர்ச்சிகரமாக மக்களிடம் பேசி ,நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டீர்கள்.நான் அதை எல்லா கூட்டங்களிலும் பேசி வருகிறேன்.ஆட்சியில் இருப்பது அதிமுக.வாக்குறுதி கொடுப்பது ஸ்டாலின்.அது எப்படி நிறைவேறும் ? அதிமுக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேறும் என்று பேசியுள்ளார்.