#BREAKING : பிப்ரவரி 24-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – அதிமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்.தமிழ்நாட்டிற்கு ரூ.15,000 கட்டணத்தொகை,புதுச்சேரிக்கு ரூ.5000 ,கேரளாவிற்கு ரூ.2000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 24 -ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
#BREAKING : பிப்ரவரி 24-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – அதிமுக#admk | #tnassemblyelection2021 pic.twitter.com/9LpHcbfjny
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025