அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போட்டி இல்லாமல் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் தேர்தல் நடத்துகின்றனர். பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும், தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை. இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களும் கேட்காமல் இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்கமாட்டேம். கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மூன்று வாரங்களில் பதிலளிக்க அதிமுக தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…