கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளார். டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கின்றனர்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்நிலையில், கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உதகை செல்கிறார். உதகை ராஜ்பவனில் 6-ம் தேதி ஓய்வெடுக்கும் ஜனாதிபதி ராணுவ பயிற்சி கல்லூரி பார்வையிடுகிறார். 6-ம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானத்தில் ஜனாதிபதி டெல்லி செல்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025