- அதிமுக+பாஜக+பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்கள்.
- அதிமுக + பிஜேபி எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் தோல்வியாடையும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், காவேரி , முல்லை பெரியாறு என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தை தொடர்ந்து பிஜேபி வஞ்சித்து வருகின்றது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் , பணபலம் அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்களின் மனதில் ஒரு எண்ணம் இருக்கின்றது. நான்கரை ஆண்டுகாலத்தில் தமிழகத்திற்கு மட்டும் செய்த வஞ்சகத்தால் பிஜேபி கூட்டணியில் அதிமுக எத்தனை கட்சியை சேர்த்து பார்த்தாலும் தோற்பது உறுதி என்று அவர் தெரிவித்தார்.