அதிமுக – பாஜக – பாமக கூட்டணியால் மக்களுக்கே லாபம் – தம்பிதுரை
- மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.
- அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
- அதிமுக – பாஜக – பாமக கூட்டணியால் மக்களுக்கே லாபம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக – பாஜக – பாமக கூட்டணியால் மக்களுக்கே லாபம் .அதிமுக – பாஜக கூட்டணி கட்டாய திருமணமா என்பதை புரோகிதர் தான் முடிவு செய்ய வேண்டும். ஸ்டாலின் விரக்தியின் விளிம்புக்கு சென்று விட்டார், இதுதான் அவரது சவாலுக்கு காரணம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.