அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கடந்த இரு நாட்களாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து பாஜவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.
அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுலபமான முடிவு எட்டாததால், இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே எண்ணிக்கையை விடத் தொகுதிகளே பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்தனர். அந்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக 20 லிருந்து 22 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.