அதிமுக,பாஜக கூட்டணி தொடரும் – பன்னீர்செல்வம் அறிவிப்பு
இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் பேசினார்.அவர் பேசுகையில்,”இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” . 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம்.நவீன சாணக்கியர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் அமித்ஷா என்று பேசினார்.