தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் – எல்.முருகன்.!

இன்று காலை கமலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுகVS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜகVS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.
ஏற்கனவே அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி வி.பி.துரைசாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வி.பி.துரைசாமியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் வி.பி.துரைசாமி அப்படி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025