அதிமுக – பாஜக கூட்டணி திருமண பந்தம் போல உள்ளது-அண்ணாமலை..!

Default Image

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் மிகச் சிறப்பாக உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கும்.மேலும், அதிமுக – பாஜக கூட்டணி திருமண பந்தம் போல இருக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில்  இருந்தே பஞ்சாப், ஹரியானா  மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல மாநிலங்களில் பல கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்