அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- அண்ணாமலை..!
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முரண்பாடான கருத்து வெளியாகி வரும் நிலையில், கூட்டணி குறித்து முடிவு செய்யும் நேரம் இதுவல்ல, வரும் சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிடுவதா..? கூட்டணியில் போட்டியிடுவதா..? என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.