அதிமுகவில் அமைப்புச் செயலாளர்கள் 11 பேர் நியமனம்.. முதல்வர், துணை முதல்வர் அறிக்கை!
அதிமுக அமைப்புச் செயலாளர்களாக 11 பேரை நியமித்து தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
அதன்படி, அதிமுக கழக அமைப்பு செயலாளர் திரு டி. ரத்தினவேலை நியமனம் செய்துள்ளனர். கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நியமனம்.
மேலும், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட செயலர்களை நியமனம் செய்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் – கே.சி.வீரமணி, விழுப்புரம் – சி.வி. சண்முகம், காஞ்சிபுரம் – சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு – சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய திருவள்ளூர் – அமைச்சர் பெஞ்சமின் ராணிப்பேட்டை – எம்.எல்.ஏ ரவி.
கோவை புறநகர்(தெற்கு) – எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகர் – அம்மன் அர்ஜூனன் திருச்சி புறநர்- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நாகை – ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு – நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு – திண்டுக்கல் சீனிவாசன் என மாவட்ட வாரியாக அந்த அறிக்கையில் முதல்வர், துணை முதல்வர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்.
*கழக அமைப்பு செயலாளர் திரு டி. ரத்தினவேல் நியமனம்.
*கொள்கை பரப்பு துணை செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நியமனம்.#ADMK | #edappadipalanisamy | #opanneerselvam pic.twitter.com/cLEnQotqH9
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 25, 2020