#BREAKING: ஜே.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கம்-அதிமுக அறிவிப்பு..!

Default Image

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அதிமுகவை விட்டு நீக்கம்.

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கினைப்பாளர் OPS அவர்களுக்கு கோரிக்கை வைத்து எனது பேட்டி அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் கலந்துகொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

GO

இதைத்தொடர்ந்து, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர். அதில், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த J.M.பஷீர், (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்