நிதி இல்லாமல் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதி ஆதாரம் இல்லாமல் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டு.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத, சாத்தியமில்லாத பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்டுள்ளது. 54 துறைகளுக்கும் திட்டத்தை வகுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரவையிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் செலவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.
ஆனால், பல லட்சம் கோடிக்கு எந்தவொரு பட்ஜெட்டிலும் உட்படாத, ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல், விருப்பத்திற்கு பல திட்டங்களை அறிவித்துள்ளது. நிதி ஆதாரம் இல்லாமல் கடந்த ஆட்சியில் அறிவித்த அறிவுப்புகளுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நிதி ஆதாரம் இல்லாமலும், நிதி இல்லாமலும் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025