சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து தங்களை பேசவிடாத காரணத்தால் அவை நிகழ்வை அதிமுக புறக்கணித்துள்ளது.
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை விதித்தார்.
இதையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சபாநாயகர் தனது நடவடிக்கையை ரத்து செய்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏ -க்களுக்கு, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.
ஆனால், சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவர்களை சபாநாயகர் அப்பாவு வெளியேற்றிய நிலையில், அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்துவிட்டு, சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.
தற்போது, சட்டப்பேரவைக்குள் வருமாறு சபாநாயகர் அழைப்பை நிராகரித்த அதிமுகவினர், ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், ஆளுநர் ரவியை சந்திக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் கள்ளச்சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை. பேச அனுமதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்தோம் என்பதால் எங்களை வெளியேற்றியுள்ளனர். மக்களின் பிரச்னையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…