#BREAKING: அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் -அன்புமணி..!
அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். ஒப்பந்தம் படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2021-சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். ஒப்பந்தம் படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறப்பட்டதற்காக தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்து பெற்றிருக்கிறோம். ஆனாலும் எங்கள் பலம் குறையாது என தெரிவித்தார்.