அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் .திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு ரூ.5000 பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்து டிடிவி வெற்றி பெற்றதாக அமைச்சர்கள் கூறுவது தவறான குற்றச்சாட்டு ஆகும். டோக்கன் வழங்கியிருந்தால் இந்நேரம் தினகரன் வீட்டை மக்கள் முற்றுகையிட்டிருப்பார்கள் தேர்தல் வரும்போது பல குண்டுகள் வெளியே வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…