அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் …! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை
அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் , தமிழகத்தில் மக்கள் நீதி மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது,மேலும் கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல் தூக்கிடப்படுவார் என்று தெரிவித்தார்.இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மீண்டும் சாத்தூரில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக ஒன்றை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் .அதிமுகவை யாராலும், எவனாலுன் அழிக்க முடியாது. எங்களை யாரும் அதட்டி ஆள முடியாது என்று பரபரப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.