சென்னைக்கு புதுவரவு… பொங்கலுக்கு திறக்கப்படும் கலைஞர் பேருந்து முனையம்.! முதல்வர் திறப்பு…

Published by
மணிகண்டன்

சென்னை முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம், பெருங்குளத்தூர் ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் கோயம்பேடு பேருந்து நிலையம் போல பிரமாண்ட பேருந்து நிலையம் சென்னையில் இல்லாமல் இருந்து வந்தது.

இதனை ஈடுசெய்ய, சென்னை பேருந்து போக்குவரத்து சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஜிஎஸ்டி சாலையில் கிளம்பாக்கத்தில் 86 ஏக்கரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு கட்டமைத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிட்ட இந்த பேருந்து நிலையத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து சில மாதங்களுக்கு முன்னதாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக பணி தாமதமானது.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று கிளம்பாக்கம் லைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் ஜனவரி 15, தை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிளம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்படும் என தெரிவித்தார்.

பணிகள் குறித்த முன்னேற்றத்தை அவ்வப்போது முதல்வர் அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் தொடர்ந்து கேட்டறிந்தார். மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் . துரைச்செயலாளர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியாளர் ராகுல் ஆகியோர் இந்த பேருந்து நிலைய பணிகள் விரைவாக முடிய எல்லா வகையிலும் உதவியாக இருந்தனர்.

மொத்தம் 86 ஏக்கர் பரப்பளவில் தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் முழுமை பெற்றுளளது. கடந்த 2,3 மாதங்கள் முன்னரே பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டியது. ஆனால் கனமழை பெய்த காரணமாக மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து , 1200 மீட்டர் அளவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று அதுவும் தற்போது நிறைவு பெற்றது. அதனால் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.  3 குழுக்கள் இரண்டரை மாதத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.

இந்த பேருந்து நிலையத்தில் 2,310 பேருந்துகள் நிற்கும். அதில் 840 ஆம்னி பேருந்துகளும் உள்ளடக்கம் . 1 லட்சம் மக்கள் இதனால் பயன்பெறுவார்கள். பயணிகளுக்கு உணவு வசதி , மருத்துவ வசதி, மருந்தகம்,  ஓய்வறை, உணவகங்கள், தீ தடுப்பு நிலையங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி , புறக்காவல் நிலையம் என அனைத்தும் அமையப்பட உள்ளது. நிரந்தர காவல் நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனுமதி அளித்துள்ளார் என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

4 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

5 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

6 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

7 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

8 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

9 hours ago