வேளாண் மண்டலம் : தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் -வைகோ
தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக த அறிவித்துள்ளது.ஆனால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும்.
இதற்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் இயற்றினாலும் சரி , தீர்மானம் நிறைவேற்றினாலும் சரி மத்திய அரசு பொருட்படுத்தாது. தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். இதனால் தஞ்சை விவசாயிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.