சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ள வேளாண் மண்டலம் சட்ட மசோதா.!

- காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
- இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வேளாண் மண்டல மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025