கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் அமைச்சர் மரியாதை..!
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் 10 மணியளவில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
இந்த நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டின் நகலை வைத்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்.