விவசாய கடன், கல்விக் கடனை ரத்து செய்யவேண்டும் ..! திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடைபெற்றது.
அதேபோல் திமுகவில் புதிதாக சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றார்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி முதல் ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
பின் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.கஜா புயல் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அந்த பகுதி மக்களின் விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.