வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் எற்படாது- இணை அமைச்சர் வி.கே.சிங்!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளரை சந்தித்த வி.கே.சிங், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு விவசாயிகளிடம் பயத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் யாரவது பாதிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை என தெரிவித்த அவர், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும் என்றும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும், மத்திய அரசு எப்போதும் விவசாயிகளின் நண்பனாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.