வேளாண் சட்டங்கள்: முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.மேலும் பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். முதல்வருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, முதலமைச்சர் அலுவகத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
கழக தலைவர் @mkstalin அவர்கள், தமிழகச் சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு எழுதியுள்ள கடித விவரம்:
Link: https://t.co/DhP9kIzJNn#DMKwithFarmers pic.twitter.com/NKA6E3zffk
— DMK (@arivalayam) October 6, 2020