இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்…!

தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட்டானது, இன்று காலை 10 மணியளவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்வார். வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை தனி முக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு துறையாக மாறிவிடும்.
இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025