இன்று சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் நடைபெற்றது. இந்த முதல் நாள் கூட்டம் நடைபெற்ற பின்னர் நடந்த அலுவலக கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு 19ஆம் தேதி 2024 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி நேற்று தமிழக சட்டசபையில் 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். இந்த பொது பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.
3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு…!
இதைத்தொடர்ந்து, இன்று 202425 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று மூன்றாவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா..? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 2023-24 ஆம் நிதி நிலை அறிக்கையை வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.