தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நான்காவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வைத்தார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை. ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயப்படுத்தவில்லை. மேகதாது அணை குறித்து பட்ஜெட்டில் எதுவும் பேசப்படவில்லை. அண்டை மாநிலங்களிடம் இருந்து நீர் பெறுவதற்கு இந்த அரசு முயற்சியும் செய்யவில்லை.
சும்மா வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளது திமுக. திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலை இருந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவேன். மக்களின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த பட்ஜெட்டில் தென்படவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட்தான் இந்த வேளாண் பட்ஜெட் என விமர்சித்தார்.
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…