வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது – எடப்பாடி பழனிசாமி

Default Image

விவசாயிகளின் வாழ்க்கையில் தமிழக அரசு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது என ஈபிஎஸ் குற்றசாட்டு 

எடப்பாடி பழனிசாமி பேட்டி 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை.

நெல் மூட்டைகளை பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே ஊக்கத்தொகை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.195 மட்டுமே அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை பற்றி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழகத்துக்கு நெல் விவசாயிகளுக்கான அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் வழங்கவில்லை. நீர்நிலைகளை பாதுகாக்க அதிமுக கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டனர். காவிரி-குண்டாறு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாதது கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்க்கையில் தமிழக அரசு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்