64,444 குடும்பங்களுக்கு வேளாண் உபகரணங்கள்;வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அசத்தல்!

Published by
Edison

சென்னை:ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ‘வேளாண் உபகரண தொகுப்புகள்’ வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.

தமிழக உழவர்களின் நலன் காத்திடும் வகையில் வேளாண்மைத் துறையினை,’வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்து,உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து,தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கென 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தனி நிதிநிலை அறிக்கையில்,அன்றாட விவசாயப் பணிகளை எளிதாக மேற்கொள்ளத் தேவைப்படும் மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய “வேளாண் உபகரணங்கள் தொகுப்பு” அரை இலட்சம் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2021) தலைமைச் செயலகத்தில்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,ரூ.15 கோடி மதிப்பில், கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர்அறுவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புகளை 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் அடையாளமாக வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை 5 வேளாண் குடும்பங்களுக்கு வழங்கி,தொடங்கி வைத்துள்ளார்.

அதன்படி,வேளாண் உபகரணங்களான கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து,மண்வெட்டி மற்றும் இரண்டு கதிர்அறுவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய ரூ.3,000 மதிப்பிலான “வேளாண் உபகரணங்கள் தொகுப்பு” 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் வழங்கப்படும்.மேலும், இத்திட்டத்தின் வாயிலாக இவ்வேளாண் உபகரணங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பொது விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் அல்லது ரூ.2250/ மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவிகித மானியம் அல்லது ரூ.2700/- மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும்.ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.

சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டமானது செயல்படுத்தப்படும்.சிறு,குறு விவசாயிகள்,பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.உழவன் செயலி வாயிலாக விருப்பமுள்ள விவசாயிகள் பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன் மேம்படுத்தப்பட்டு,உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக,முதல்வர் அவர்கள் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் தஆ.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Recent Posts

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

33 minutes ago

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

37 minutes ago

Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

52 minutes ago

மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…

1 hour ago

இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ…

டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…

2 hours ago

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

2 hours ago