#AgriBudget2021: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு!!

Default Image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2வது இன்று தொடங்கிய நிலையில், வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும்  தொலைநோக்கு பார்வையுடன் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#AgriBudget2021 -வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு:

  • அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7.07 கோடி ஒதுக்கீடு.
  • பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம், நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு.
  • கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.14.28 கோடி ஒதுக்கீடு.
  • கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு.
  • இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு 59 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்.
  • விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • 50 உழவர் சந்தைகளின் தற்போதையை நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
  • கூட்டுப்பண்ணைய திட்டத்திற்கு ரூ.59.55 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ரூ.1 லட்சம் செலவில் 100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • நவீன முறையில் பூச்சிமருந்து தெளிக்க 4 ட்ரான்கள், டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு.
  • சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானிய திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க மின்சாரம் தர மின்சார வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி ஒதுக்கீடு.
  • பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.29.12 கோடி ஒதுக்கீடு.
  • பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செய்யப்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.
  • மரபு சார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
  • கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.
  • பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டத்திற்கு ரூ.2.68 கோடி ஒதுக்கீடு.
  • கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
  • நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
  • 15 மாவட்டங்களில் ரூ.3.5 கோடியில் 28 உளர் களங்கள் அமைக்கப்படும்.
  • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சத்திற்கு மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கு என ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • 50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும்.
  • புதிய விவசாய தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.
  • குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
  • அரவை பருவத்தில் டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.150 வழங்கப்படும்.
  • கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900 ஆக உயரும்.
  • கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ” சிறப்பு ஊக்கத்தொகையாக ” டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வழங்க அரசு முடிவு.
  • ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.
  • பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்