அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்தல் நடத்தாமல் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது விதிகளுக்கு எதிரானது.எனவே திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்ததை ரத்து செய்யக் கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.அவர் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.