பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!ஒருவழியாக முடிவுக்கு வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய ஸ்டிரைக் வாபஸ்…!

Published by
Venu

கேன் குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
Image result for தண்ணீர் லாரி வேலை நிறுத்தம்
 
தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால் டீ கடை, ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.

 
இதனால்  தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டார்.சென்னையில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.
 
முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும்.  இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படும்.தண்ணீர் லாரி உரிமையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.பேச்சுவார்த்தையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதன் பின்னர் இன்று மாலை  பேச்சு வார்த்தை நடைபெற்றது.தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து கேன் குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Published by
Venu

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

7 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

7 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

9 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

9 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

10 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

11 hours ago