தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – சிறப்பு அதிகாரிகள் நியமனம்

கொரோனா தடுப்பிற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 1082 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .எனவே தமிழக அரசு மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தென் மண்டலத்திற்கு அமெரிச பூஜாரி,கிழக்கு மண்டலத்திற்கு அபாஷ்குமார் ,மேற்கு மண்டலத்திற்கு அபேய் குமார் சிங் , புறநகர் மண்டலத்திற்கு பவானீஸ்வரி மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025