ஆசிரியர் நியமன வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.! வெளியானது தமிழக அரசாணை.!

Default Image

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இடஒதுக்கீட்தில் உள்ள பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே போல, அவர்களுக்கான வயது வரம்பு பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளன. அதில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. அதே போல, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் மீதமுள்ள 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஆசியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து வயது வரம்பில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது

அதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இடஒதுக்கீட்தில் உள்ள பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை ஒருமுறை மட்டுமே கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்