பாஜகவுக்கு எதிராக, எதிர்ப்பு பதாகைகளுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி, எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கருப்பு சட்டை :
காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்ட இன்று நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
பதாகைகள் :
அதே போல காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல, ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்திஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அனுமதி மறுப்பு :
மேலும், இன்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்படவும் உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்து உள்ளனர். இதக்ரு முன்னதாக சட்டப்பேரவைக்குள் பதாகைகளுடன் நுழைய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…