மீண்டும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை சோதனை!
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வருமான வரித்துறை. அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து, தற்போது அதிகாரிகள் சோதனையில் நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையானது திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், சென்னையில் அவருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளிலும், மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தேசிய கல்வி கொள்கை 2020.! சமூக அறிவியல் பாடத்தில் ராமாயணம், மகாபாரதம்.!
அதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களான காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்தது. சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் சில இடங்களில் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை நடந்தாக கூறப்பட்டது. அப்போது வருமான வரி சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, இது போன்ற வருமானவரித்துறை சோதனைக்கு நான், எனது தலைவர் திமுக தொண்டர்கள் யாரும் அஞ்சப்போவது இல்லை என்றார்.
மேலும், என்னிடமிருந்து ஒரு பைசாவை கூட வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யவில்லை. இதன் மூலம் எங்கள் தேர்தல் பணிகளை முடக்கி விட முடியாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.