மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.!
இன்று காலை சுங்குவார்சத்திரத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு உடன்பாடு எட்டினாலும், சிஐடியு தொழிற்சங்கத்தினர் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.?
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சுங்குவார்சத்திரத்தில் போடப்பட்டிருந்த போராட்ட பந்தலும் அகற்றப்பட்டது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக இன்று காலையில் மீண்டும் சுங்குவார்சத்திரத்தில் ஊழியர்கள் போராட்டத்திற்காக குவிந்தனர்.
அவர்களிடம் காலை முதலே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரினர். ஆனாலும், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் பேருந்து மூலம் சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தற்போது வரையில் தகவல் வெளியாகியுள்ளது.