மீண்டும் இந்தி மொழி திணிப்பா ! நல்லக்கண்ணு கேள்வி ?
மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி மொழி திணிப்பதை ஏற்க முடியாது என்று சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் படி,இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி மொழியானது கட்டாயமாக்கப்படுகிறது.அதே போல்,இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி,ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படுகிறது.இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.