Breaking : மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.!
மதுரையில் முழு பொதுமுடக்கமானது, மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த முழு பொதுமுடக்கம் நிறைவடைந்து, நாளை முதல், வழக்கமான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
தற்போது மதுரையில் முழு பொதுமுடக்கமானது, மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் உதயகுமார் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும், அந்த புள்ளி விவரங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம். ‘என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.