மூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.!

Default Image
  •  நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பச்சையாறு அணை வேகமாக உயர தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியுள்ளது.
  • 110-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரங்களில் பருவ மழை பெய்து வந்தது, ஆங்காங்கே இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடியாகும். கடந்த நாட்களில் களக்காடு பகுதியில் பெய்த தொடர் மழையால் வேகமாக உயரத் தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியது, மேலும் பச்சையாறு அணை 3 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 3 அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் மூலம், களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, அப்பகுதி இளைஞர்கள் அணையில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்