இயந்திரங்களுக்கு சீல்… ஆட்சியர் நேரில் ஆய்வு… துப்பாக்கியுடன் பலத்த பாதுகாப்பு.!
நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது இரவு 9 மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தினர்.
2021 பொதுத்தேர்தல் : இரவு 10 மணி இறுதி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,70,192 வாக்காளர்கள் வாக்களித்தனர் எனவும், 74.79 சதவீத வாக்குகள் வாக்குபதிவு பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 பொதுத்தேர்தலில் 66.24 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவாகி இருந்ததது குறிப்பிடத்தக்கது.
அறைக்கு சீல் : பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக, சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ஈரோடு, சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்கு என்னும் அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு வேட்பாளர்கள், பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு : வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினரும், துப்பாக்கி இந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீல் வைக்கப்பட்ட வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி பார்வையிட்டார்.
வருகிற மார்ச் 2ஆம் தேதி (நாள் மறுநாள்) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.