தேர்தல் முடிந்தபின்,போராட்டம் தீவிரமாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.
- உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின் , குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பேரணி நடத்தியதற்காக 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்போம்.குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.