மிரட்டும் கஜா புயல்..!அறிவிப்பு வந்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை தகவல் மையம் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு திட்டத்தை சோதனை அடிப்படையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இதன் பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், புயல் & பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகவலை மக்களுக்கு தெரிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். நாகையில் புயல் கரையை கடப்பதால், கடலூரில் இருந்து கூடுதலாக ஒரு தேசிய பேரிடர் குழு மற்றும் 2 மாநில பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் .கஜா புயல் கரையை கடந்தது என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு வந்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்.கஜா புயல் தொடர்பாக மக்களை அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.