ரஜினிகாந்துக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் – தமிழிசை சவுந்தரராஜன்
எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் கல்லூரில் படிக்கும்போது உடைக்கே ரசிகர்கள் இருப்பார்கள்.
அரசியல் கட்சி தலைவர் ஆனதும், அதில் கவனம் செலுத்த முடியவில்லை. கருப்பாக யாருமே இல்லையா என்று கூறுவேன். எப்பப்பார்த்தாலும் என்னையே விமர்சனம் செய்து வருகிறார்கள் என சொல்லிக்கொள்வேன். ஆனால், இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கமாட்டேன். என்னை குள்ளம் என்று சொன்னார்கள், குணத்திலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் என்றுமே நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறேன்.
எனக்கு சுருட்டை முடி தான். ஆனால், என்னுடைய சொந்த பணத்தில் தான் பொது மக்களுக்கு செலவு செய்திருக்கிறேன் தவிர, யார் பணத்தையும் சுருட்டியது அல்ல. நான் கருப்பு தான். ஆனால், என் கைகளில் கருப்பு பணம் இல்லை. இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவமானங்கள், விமர்சனங்கள் வரும்போது தான், இதைத்தாண்டி நாம் உயர வேண்டும் என்பதுதான் விதி. வெறி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று உற்சாகமாகவும் மேடையில் தெரிவித்துள்ளார்.