முதல்வர் உடனான சந்திப்பு… போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு.!

Tamilnadu CM MK Stalin - JACTOGEO

பழைய ஓய்வூதிய திட்டம் அமலபடுத்துவது,  நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ எனும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நாளை பிப்ரவரி 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். மேலும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்து இருந்தது.

லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை

இந்த அறிவிப்பை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்பதால், நாளை போராட்டம் நடைபெறும் நிலை நீடித்தது. இதற்கு இடையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நாளை அலுவலகத்திற்கு வராத அரசு ஊழியர்களுக்கு அன்றைய ஒரு நாள் ஊதியம் வழங்கப்படாது எனவும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான், ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், நாங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினோம். நீங்கள் அறிவித்தது போல் மற்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டார்கள். ஆனால், இன்னும் தமிழகத்தில் அமல்படுத்தவில்லை என்பதை எடுத்துக் கூறினோம்.

மேலும் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளையும் நாங்கள் முன்வைத்தோம். இதனை கேட்டுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் எதையும் மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. நான் செய்யாமல் யார் செய்யப் போகிறார்கள் எனக்கூறி நிதிநிலை சீரடைந்த பிறகு ஒவ்வொரு கோரிக்கையாக நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என முதல்வர் கூறினார் என்றும்,

முதல்வர் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் நாளை அறிவித்து இருந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்  தற்போது வாபஸ் வாபஸ் பெறப்படுகிறது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்