பிரதமரை சந்தித்த பின் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி..!
மிக்ஜாம் புயல் (Michaung cyclone) மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெல்ல பாதிப்பை கருத்தில் கொண்டு, ரூ.5060 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!
இந்த நிலையில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் நேரில் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு அவர்கள், உடனடி தேவையாக ரூ.2000 கோடி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார்.
வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து கடிதத்தில் விளக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ராஜ்நாத் பார்வையிட்ட பின் உடனடி தேவையை நிறைவேற்றுவதாக பிரதமர் கூறினார் என தெரிவித்துளளார்.