மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
தமிழ் மொழியை அறிவாலும், உணர்வாலும் வளர்க்க வேண்டும். மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம். – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.
சென்னையில் இன்று இலக்கியத் திருவிழா 2023-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இலக்கிய திருவிழாவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் முதல்வர் வெளியிட்டார்.
அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மதத்தாலும், சாதியாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போதெல்லாம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒற்றை வரி மனிதர்களை ஒன்றாக்கிவிடும் என பேசினார் .
மேலும், திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில் தமிழ் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன. திமுக ஆட்சி எப்போதுமே தமிழ் ஆட்சி தான். தமிழுக்காகவே நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம்.
தமிழ் மொழியை அறிவாலும், உணர்வாலும் வளர்க்க வேண்டும். மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம் என சென்னை இலக்கியத் திருவிழாவை துவக்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.